» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழகத்தில் மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மே.23-ல் வாக்கு எண்ணிக்கை!!
செவ்வாய் 9, ஏப்ரல் 2019 5:33:43 PM (IST)
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஓசூர் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி தகுதி நீக்கம் காரணமாக அந்த தொகுதியும் அறிவிக்கப்பட்டது.மொத்தம் 21 தொகுதிகள் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் காலியாக இருந்தது. இந்நிலையில் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு இருப்பதால் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை ஒட்டி அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டு தொகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் சென்னை வந்த மத்திய தேர்தல் ஆணைய கூடுதல் ஆணையர்களை சந்தித்து அரசியல் கட்சியினர் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டுகோள் வைத்தனர்.
இந்நிலையில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 4 தொகுதிகளிலும் மே.19 இடைத்தேர்தல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 18 தொகுதிகள் எண்ணப்படும் மே.23 அன்றே எண்ணப்படும் என்பதால் வேறு வேறு நாட்களில் நடத்தப்பட்டாலும், மே.23 அன்று 22 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகிறது. ஏப்.22 அன்று வேட்புமனு தாக்கலும், ஏப்.30 அன்று வேட்பு மனு பரிசீலனையும் நடக்கிறது. மே. 19 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மே.23 தமிழக நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் 4 தொகுதிகளின் எண்ணிக்கையும் நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!
புதன் 11, டிசம்பர் 2019 5:25:43 PM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி : ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:59:11 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை : கமல்ஹாசன் அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 10:22:44 AM (IST)

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சனி 7, டிசம்பர் 2019 11:08:51 AM (IST)

பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வியாழன் 5, டிசம்பர் 2019 3:48:00 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு
புதன் 4, டிசம்பர் 2019 5:04:23 PM (IST)
