» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
புதிய கல்விக் கொள்கை குறித்து பேச்சு: சூர்யாவுக்கு கமல்ஹாசன், பா. ரஞ்சித் ஆதரவு
புதன் 17, ஜூலை 2019 4:58:38 PM (IST)
புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துகளுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது, கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் ஆதரவு
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யாவுக்குத் துணை நிற்போம் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள், 3 வயதிலேயே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும், ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி? என்றும் விமர்சித்தார்.30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை? என்றும் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.
சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
இவன்Jul 20, 2019 - 01:29:11 PM | Posted IP 162.1*****
பன்றிகள் சாக்கடை கூட்டத்தில் சேருவது போல், கூத்தாடி கூத்தடிகூட சேரும் ..
மேலும் தொடரும் செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை : கமல்ஹாசன் அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 10:22:44 AM (IST)

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சனி 7, டிசம்பர் 2019 11:08:51 AM (IST)

பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வியாழன் 5, டிசம்பர் 2019 3:48:00 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு
புதன் 4, டிசம்பர் 2019 5:04:23 PM (IST)

தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்: டிச.27, 30ல் வாக்குப்பதிவு - அட்டவணை வெளியீடு
திங்கள் 2, டிசம்பர் 2019 11:06:15 AM (IST)

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்
ஞாயிறு 24, நவம்பர் 2019 5:26:29 PM (IST)

சாந்தன்Jul 21, 2019 - 02:10:25 PM | Posted IP 162.1*****