» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: தமிழக அரசு

புதன் 31, ஜூலை 2019 11:32:08 AM (IST)

பிளஸ் 1 மாணவவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பொருளாதார உச்சவரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. 

இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட 7 லட்சத்து 39 ஆயிரத்து 636 மிதிவண்டிகள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 மிதிவண்டிகள் 2018-2019-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. 

இத்திட்டத்திற்காக 2019-2020-ம் ஆண்டிற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.73 கோடி, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.65.48 கோடி என மொத்தம் ரூ.138.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கும் தொடர்ந்து விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். இத்திட்டம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory