» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம்: டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து

திங்கள் 2, செப்டம்பர் 2019 3:50:44 PM (IST)

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசைக்கு மு.க. ஸ்டாலின், வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.யும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தெலுங்கானா மாநில மக்களுக்கு டாக்டர் தமிழிசை நல்லது செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

தமிழக பாட நூல் கழக தலைவர் பா.வளர்மதி: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். அவர் அண்டை மாநிலத்து ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழகத்தை சேர்ந்த பெண்மணி மதிப்புமிக்க ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழக பெண்களுக்கு கிடைத்த பெருமை. அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

தி.க. தலைவர் வீரமணி 

தி.க. தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் (குமரி அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழக எனது சக மாணவத் தோழரின் மகள்) டாக்டர் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.  பாரிவேந்தர் எம்.பி.யும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory