» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் 5 , 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு: அமைச்சர் தகவல்

புதன் 18, செப்டம்பர் 2019 5:06:47 PM (IST)

5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் அமல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலாண்டுத் தேர்வுக்குப் பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக, காந்தியின் பிறந்த நாளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜயந்தி நாளில் அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.தமிழகத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டடத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர்தான் எடுக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory