» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது: பிரதமர் மோடி

சனி 9, நவம்பர் 2019 5:07:17 PM (IST)

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட 5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பினை அளித்தது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல என்று குறிப்பிட்டனர். 

இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; "அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது. நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை அயோத்தி தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory