» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: அதிமுக தலைமை அறிவிப்பு

ஞாயிறு 10, நவம்பர் 2019 8:51:48 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில், கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500ம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக விண்ணப்ப படிவங்களை வழங்கும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory