» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி

புதன் 13, மே 2020 12:09:32 PM (IST)

தமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள கரோனா பாதிப்பு பின்னர் குறையும்.   நோய்த்தொற்றை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது.  என முதல்வர் எடப்பாடி கே.பழனிசானி தெரிவித்தார். 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் இன்று காலை காணொலிக் காட்சி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், கண்ணுக்கு தெரியாத நோய்த்தொற்று எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வலியுறுத்தி வருகிறோம்.  தொற்று பாதிப்பு முதலில் உயர்ந்துபின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது.   கரோனா நோய்த்தொற்றை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி, முகக் கவசம்  அணிவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தலின் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்க அரசு வழிவகைகளை செய்துள்ளது.

குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு ரேஷன் கடைகள் மூலம், விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்டது.  இது மே மாதத்திலும் வழங்கப்பட்டு உள்ளது.  மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் இந்த பொருட்களை மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.  அதனால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில் ரூ.1,000 மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை வழங்கினோம். இதன்பின்னர் மீண்டும் ரூ.1,000 அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.  அம்மா உணவகங்கள் வழியேயும் மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறோம்.  இதனால் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் பெறுகின்றனர் என முதல்வர் பழனிசாமி கூறினார்.மத்திய அரசால் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் வரும் 17-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை தமிழக அரசு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து

அருண்மே 14, 2020 - 03:19:05 PM | Posted IP 157.4*****

வருமானம் இல்லாம அரசு நடத்துறது ரொம்பவே கஷ்டம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory