» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக முதல்வருக்கான ஆலோசனைக் குழுவில் 5 பொருளாதார நிபுணர்கள்!!

திங்கள் 21, ஜூன் 2021 5:08:42 PM (IST)



தமிழக முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் நோபல் பரிசுபெற்ற நிபுணர் உள்பட பொருளாதார நிபுணர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். 

தமிழக சட்டசபையின்  16வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்-அமைச்சர்  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த கவர்னரை  சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார்.

பின்னர் கவர்னர் உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான பல அமசங்கள் இருந்தன. அதில் முக்கிய அம்சமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு  ஆலோசனை  வழங்க  முதல்-அமைச்சருக்கான  பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவர்னர் உரையில் கூறி இருப்பதாவது: வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்-அமைச்சருக்கு  ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்  ரகுராம் ராஜன்,

2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ,

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,

4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,

5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பர்.

இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு  ஆலோசனைகளை அளிப்பார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory