» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
செவ்வாய் 24, மே 2022 4:24:16 PM (IST)
பாஜகவை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனி இயக்கம் தொடங்குவதாக தெரிவித்த அவர்; காங்கிரசின் சிந்தனை கூட்டம் தோல்வி என்றும் எதிர்வரும் குஜராத், ஹிமாச்சல பிரதேசம், தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அரசியல் நிலவரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்; சுதந்திரத்திற்கு பின் அரைநூற்றாண்டு காலம் யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும், காங்கிரஸ் கட்சியை சுற்றியே இந்திய அரசியல் அமைந்தது என்றும் இதே போல அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள், பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
எந்த ஒரு சித்தாந்தமும் சிகரத்தை நோக்கி சென்று பிறகு கீழேதான் இறங்கும் என்ற கோட்பாட்டை தான் ஏற்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால், பாஜக கீழே இறங்குவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இருக்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்று, ஆனால் அந்த கட்சி எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பாடம் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வீதிக்கு வந்து போராட வேண்டிய நேரம் இது. ஆனால், என்ன செய்தாலும் ஊடகங்களின் கவனத்தைப் பெற முடியாத போது என்னதான் செய்வது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த மனநிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளிவர வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பீகாரில் மாற்றம் கொண்டு வருவதற்காக அம்மாநில மக்களை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்த அவர், இதற்காக அரசியல் கட்சி தொடங்கப்பட்டால் அது தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தியதாக இருக்காது என்றும் விளக்கம் அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக பற்றி அ.தி.மு.க.வினர் விமர்சிக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
புதன் 20, செப்டம்பர் 2023 5:29:51 PM (IST)

ஆவின் நெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி கோரிக்கை
வியாழன் 14, செப்டம்பர் 2023 5:12:37 PM (IST)

மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு - வி.கே.சசிகலா நம்பிக்கை
திங்கள் 11, செப்டம்பர் 2023 10:41:55 AM (IST)

நாட்டின் பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது? சீமான் கேள்வி
புதன் 6, செப்டம்பர் 2023 3:59:14 PM (IST)

டிசம்பர் மாதத்திலேயே மக்களவைத் தேர்தல் வரலாம்: மம்தா பானர்ஜி கணிப்பு
செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 10:43:34 AM (IST)

தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:49:00 PM (IST)
