» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

உதயநிதி அமைச்சராகிறார்!.. அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம்!

திங்கள் 30, மே 2022 12:47:09 PM (IST)உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில்  நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்தது. அது சமீப காலமாக தீவிரம் அடைந்துள்ளது. எம்எல்ஏ -க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory