» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் செயல்படலாம்: ஓபிஎஸ் அறிவிப்பு
சனி 23, ஜூலை 2022 5:21:43 PM (IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கி வருகிறன்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி கழக இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் அந்தந்த பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் காலியாக உள்ள பதவிகள் விரைவில் நிரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
கருணாகரன்Jul 24, 2022 - 02:37:14 PM | Posted IP 162.1*****
உங்களுக்கே அதிமுகவில் பதவி இல்லை நீங்கள் யாரிடம் சொல்வீர்கள். பேசாமல் கருணாஸ் கட்சியில் சேர்ந்து விடுங்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:16:06 PM (IST)





MUTHALRAJAug 6, 2022 - 02:06:31 PM | Posted IP 162.1*****