» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் நடைபோட்டு, தடைகளை தகர்தெறிய வேண்டும்: முதல்வர்
வெள்ளி 29, ஜூலை 2022 11:34:43 AM (IST)

மாணவர்கள் பகுத்தறிவு பாதை நடைபோட்டு, வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவா்களுக்கு பிரதமா் மோடி பதக்கங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து. பட்டம்பெற்ற நீங்கள்தான் நாட்டை செழிக்கச் செய்யும் வல்லுநர்கள். பழைமைவாதத்தை புறந்தள்ளி புதிய கருத்துகளை ஏற்று மாணவர்கள் பகுத்தறிவு பாதை நடைபோடுவதுடன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். தமிழர்கள் தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்’ எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:16:06 PM (IST)

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)
