» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சு. சுவாமி டுவிட்

செவ்வாய் 2, ஆகஸ்ட் 2022 4:54:03 PM (IST)

கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று மத்திய நிதி மந்திரி கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன. 

அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை '' என சாடியுள்ளார்.

சர்வதேச அளவிலான பிரச்னைகளால் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், நம் நாட்டில் அதுபோன்ற நிலை ஏற்பட பூஜ்ஜிய சதவீதமே சாத்தியமுள்ளது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மாநிலங்களவையில் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory