» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன்: சசிகலா அறிவிப்பு

வியாழன் 15, செப்டம்பர் 2022 3:33:20 PM (IST)

அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியது, அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம் என்றும், நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் எனவும் தெரிவித்தார். பன்னீர்செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்றால் கேள்விக்கு? நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் எனவும் அவர் பதிலளித்தார்.

மேலும் திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள்தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

எவன்Sep 17, 2022 - 12:20:10 PM | Posted IP 162.1*****

மன்னார்குடி மாஃபியா திருட்டு குடும்பம் , இவரால் தான் ஜெயலலிதா குற்றவாளி ஆக்கப்பட்டார்.

PUTHIYA VARKALSep 15, 2022 - 04:26:46 PM | Posted IP 162.1*****

இவருக்கு என்ன தெரியும் ? ஜெ. இருந்தவரை கட்சியில் இவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. ஜெ. போன்ற ஒரு ஆளுமைமிக்க பெண்மணிக்கு இவர் எப்படிப்பட்டவர் என்று. நன்றாக தெரியும். இவரால்தான் ஜெ க்கு NEGATIVE VOTES. EPS மட்டும் தான் அதிமுக தலைமைக்கு பொருத்தமானவர் EPS அவர்கள் ஜெ . போல சிறந்த ஆளுமை பண்பு உள்ளவர்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory