விஷால்-த்ரிஷா-சுனைனா நடிக்கும் சமர் படத்தின் டிரைலர்

Sponsored Ads


விஷால்-த்ரிஷா-சுனைனா நடிக்கும் சமர் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 26, டிசம்பர் 2012
நேரம் 10:18:35 PM (IST)

நடிகர் விஷால், நடிகை த்ரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சமர் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் சமர். டைரக்டர் திரு இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தை டைரக்டர் திரு இயக்கியிருக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் சமர். முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. காதல் மற்றும் ஆக்ஷன் திரில்லரான இத்திரைப்படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.Tirunelveli Business Directory