விவேக் ஓப்ராய் நடிப்பில் பிரதமர் மோடியின் பயோபிக் : டிரெய்லர் வெளியீடு!

Sponsored Ads


விவேக் ஓப்ராய் நடிப்பில் பிரதமர் மோடியின் பயோபிக் : டிரெய்லர் வெளியீடு!
பதிவு செய்த நாள் வியாழன் 21, மார்ச் 2019
நேரம் 5:49:39 PM (IST)

பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. மக்களவை பொதுத் தேர்தல் இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 5-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஎம் நரேந்திர மோடி படம் வெளியாகவுள்ளது.Tirunelveli Business Directory