பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் வியாழன் 22, ஏப்ரல் 2021
நேரம் 12:36:04 PM (IST)

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே. இப்படத்தில் திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. தற்போது ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள். ராதே படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. மே 13 அன்று திரையரங்கில் வெளியாகும் ராதே படம் அதே நாளில் ஜீ பிளெக்ஸ் ஓடிடியிலும் வெளியாகிறது.



Tirunelveli Business Directory