» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வங்கதேசத்தில் பதற்றம் எதிரொலி: மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்பு!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:58:59 PM (IST)
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், பிரதமர் பதவி விலகக் கோரி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். அந்நாட்டு அரசை ராணுவம் கைப்பற்றியது. போராட்டத்தைக் கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் முஜிபூர் ரகுமானின் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்புப் போடப்பட்டுள்ளது.