» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து: 8 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
வெள்ளி 20, டிசம்பர் 2024 12:49:35 PM (IST)
ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது. ரசாயனம் ஏற்றிச் சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியது. இந்த பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் பங்கில் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சந்திக்க முதல்-அமைச்சர் பஜன் லால் சர்மா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.