» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் 10 மணி நேரம் வேலைக்கு அனுமதி: அரசின் முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு!
ஞாயிறு 8, ஜூன் 2025 12:40:37 PM (IST)
ஆந்திராவில் 10 மணி நேரம் வேலைக்கு அனுமதி அளித்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை 10 மணி நேரம் வேலைக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவிலும் தற்போது வரை தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எட்டு மணி நேர வேலை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது, ஊழியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுப்பது ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களை 10 மணி நேரம் வரை வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதியுடன் பெண்களையும் இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கவும் ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால் அரசின் இந்த முடிவு, அடிமை மனநிலையை தொழிலாளர்களிடம் ஏற்படுத்தும் என்று தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயியின் மகளின் திருமணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
செவ்வாய் 10, மார்ச் 2026 5:44:52 PM (IST)

எரிவாயு தட்டுப்பாடு: மும்பை, பெங்களூருவில் உணவகங்கள் மூடல் - பொதுமக்கள் அதிர்ச்சி!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:37:46 PM (IST)

8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை: மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:50:27 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறி; விவாதிக்க கார்கே வலியுறுத்தல்!
திங்கள் 9, மார்ச் 2026 5:14:50 PM (IST)

குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை செயலர் உத்தரவு
திங்கள் 9, மார்ச் 2026 12:46:02 PM (IST)

