» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்

திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

2025 ஐபிஎல் கோப்பையை வென்ற ஆா்சிபி அணி கடந்த ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரில் நடத்திய வெற்றிப் பேரணியில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடா் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவது குறித்து பல ஐயங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவா் தோ்தலில் நேற்று வாக்கு செலுத்திவிட்டு செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: நான் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகன். கா்நாடகத்தில் கூட்டநெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் இனி நிகழாது என உறுதியளிக்கிறோம். அடுத்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். 

அங்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படும்.கா்நாடகம் மற்றும் பெங்களூரின் பெருமையாக கருதப்படும் சின்னசாமி மைதானத்தைவிட்டு வேறு எங்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் திட்டமில்லை. வருங்காலத்தில் நவீன வசதிகளுடன் மிகப்பெரிய மைதானம் ஒன்று கட்டப்படும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory