» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையின் இடைக்காலப் பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்பு!

செவ்வாய் 24, செப்டம்பர் 2024 4:45:34 PM (IST)



இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டு, இன்று புதிய அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஹரிணி அமரசூரியா இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில், 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹரிணி. நீதி, கல்வி, தொழில்துறை அமைச்சராகவும், அதிபர் அநுர குமார திஸ்ஸநாயக முன்னிலையில், ஹரிணி அமரசூரியா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெருமுன கடசித் தலைவர் அநுர குமார திஸ்ஸநாயக நேற்று பதவியேற்றுக்கொண்டார். புதிய அதிபர் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வசதியாகவும் புதிய ஆட்சி சூழலுக்கு ஏற்ப புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஏதுவாகவும் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்திருந்தார்.

இந்நிலையில், புதிய இடைக்கால பிரதமராக ஹரிணி நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அதிபர் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory