» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்த நாள் விழா!

வியாழன் 5, செப்டம்பர் 2024 10:16:39 AM (IST)



தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் மீனாட்சிநாதன், பொருளாளர் தளவாய், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், செந்தில் ஆறுமுகம், ஸ்ரீதர், எல்ஐசி கிட்டு, கோமதிநாயகம், மூர்த்தி, பாலன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் 



வ.உ.சி., நற்பணி மன்றம்: தூத்துக்குடி வ.உ.சி., நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் செந்தில் ஆறுமுகம் வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில் வீரபாகு, பொருளாளர் மகாராஜன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராஜேந்திரன், குற்றாலிங்கம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர் 



இந்து முன்னணி : தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் தலைவர் பாலமுருகன் வஉசி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநகர தலைவர் ராகவேந்திரா, சுடலைமணி, சங்கர் விஜய இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory