» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர் கோரிக்கை

புதன் 12, மார்ச் 2025 8:17:48 AM (IST)

விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்ட செயலாளர் சமூக ஆர்வலர் அ.செல்வகுமார் வெளியிட்ட அறிக்கையில், "நகர்ப்புற உள்ளாட்சி விதிகளுக்கு மாறாக சொத்துவரி, உயர்த்துதல்,குடிநீர் விநியோக உபவிதிகளை மீறி வரிவிதிப்பு செய்யப்படாத (அ) கட்டுமானம் நடைபெறக்கூடிய கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வரிவிதிப்பு தொகையை அதிகரிக்காமல் இருந்து, ஒருதலைபட்சமாக செயல்படுவது, 

பல இலட்சம் வரிபாக்கி வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக இருந்து கொண்டு, அப்பாவி ஏழைமக்களிடம் வரிவசூல் செய்ய முனைப்பு காட்டுவது, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடிப்பது என தொடர்ந்து விதிகளை மீறி செயல்பட்டு தமிழக அரசிற்கு பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து உடனடியாக பணியிடை நீக்கம் செய்திடுமாறு தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

MURUGAN RMar 15, 2025 - 07:19:59 AM | Posted IP 162.1*****

அப்படி எல்லாம் சொல்லாதீங்க அவர் நல்லவர்வல்லவர்

ANTONY RAJMar 14, 2025 - 05:39:08 PM | Posted IP 172.7*****

Municipal commissioner supporting only whoever having money, real complaint and normal middle class people reporting actual complaint he's not taking any action,better let him go 😑

SasvathMar 13, 2025 - 12:03:39 AM | Posted IP 104.2*****

Go back thoothukudi corporation commissioner

SeshanMar 13, 2025 - 12:00:20 AM | Posted IP 104.2*****

If we oppose him he is asking building approval and parking space

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory