» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் முத்துநகர் எஸ்பிரஸ் ரயில் தாமதம் : பயணிகள் ஆவேசம்!!
சனி 7, ஜூன் 2025 9:30:16 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மின் கோளாறு காரணமாக முத்துநகர் எஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இன்று ரயில் பெட்டியை 4வது பிளாட்பாரத்தில் இருந்து 1வது பிளாட்பாரத்தில் எடுத்துச் செல்வதற்கு முயன்ற போது மின் கோளாறு காரணமாக சக்கரங்கள் இயங்கவில்லை. இதனால் ரயிலை எடுக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து அந்த பெட்டியை மட்டும் கழற்றி விட்டுவிட்டு அதற்கு பதிலாக புதிய ரயில் பெட்டி மாற்றி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை முதல் பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தனர். நேரம் ஆக ஆக ரயில் கூட்டம் அதிகமானதால் பயணிகள் ரயில்வே மேலாளர் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்பு 8.35 மணிக்கு முதல் பிளாட்பாரத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் ஏறினார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியில் ஏசி ஓட வில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து மெக்கானிக் வரவைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் பழுதுபார்க்கப்பட்டன. பின்னர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 நிமிடம் தாமதமாக 9.05 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றது.
மக்கள் கருத்து
ஓட்டு போட்ட முட்டாள்Jun 9, 2025 - 06:13:50 PM | Posted IP 162.1*****
பணம் கொழுத்த அரசியல்வாதிகள் விமானத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள் வேற என்னத்த சொல்ல?
BalamuruganJun 8, 2025 - 10:47:57 AM | Posted IP 104.2*****
தமிழிசை mp தேர்தலின் போது தூத்துக்குடியில் இருந்து புல்லட் ரயில் விடபடும் என அறிவித்தார் இதுவரை வந்தேபாரத் கூட விடபடவில்லை பழைய ரயில் பெட்டியை விட தற்போது ஓடும் பெட்டிகள் தகறடப்பா போல் கடும் சத்தத்தோடு ஓடியது இன்று அதுவும் பழுதாகியுள்ளது என்றும் ஹவுஸ்புல்லா ஓடியும் கூடுதல் ரயிலை இயக்க நிர்வாகமும் பயணிகள் நலசங்கமும், MP,MLA வும் முயற்ச்சிக்கவில்லை காரணம் ஆம்ணி பேருந்தால் கிடைக்கும்-------
பயனிJun 8, 2025 - 06:51:47 AM | Posted IP 162.1*****
ஏசி பெட்டியில் பூச்சிகள் தொல்லை அதிகம் இருக்கு
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

reply to balamuruganJun 10, 2025 - 07:55:08 AM | Posted IP 104.2*****