» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு : திருச்செந்தூரில் பரிதாபம்

ஞாயிறு 8, ஜூன் 2025 12:08:08 PM (IST)

திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நகராட்சி சார்பில் நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். 

இந்நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது. இதனை சுத்தம் செய்யும் பணியில் இதில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளரான சுடலைமணி (40) ஈடுபட்டுக் கொண்டிருந்தார் 

அவர் கழிவுநீர் உறிஞ்சும் குழாயை பாதாள சாக்கடைக்குள் செலுத்தியபோது, எதிர்பாராதவிதமாக தலைகுப்புற பாதாள சாக்கடைக்குள் விழுந்து விட்டார். இதனைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதாள சாக்கடையில் இறங்கி சுடலைமணியை மீட்டனர். 

பின்னர் அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுடலைமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் கழிவுநீரை அகற்றியபோது பாதாள சாக்கடையில் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

நன்றிJun 8, 2025 - 06:17:13 PM | Posted IP 162.1*****

திடீரென விழவில்லை... தூய்மைப்பணி செய்யும் போது கழிவு நீரில் மூழ்கி உயிரிழந்தார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory