» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் புதிய நூலகம் திறப்பு விழா!
செவ்வாய் 10, ஜூன் 2025 3:48:22 PM (IST)

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் புதிய நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி பொது நூலகத்துறை சார்பில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், காத்திருக்கும் இடத்தை முறையாக பயன்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் நூலகம் அமைக்கும் பணிகளை இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவகல்லூரியில் தொடங்கப்பட்ட நூலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ பயிற்சி ஆட்சியர் தவ்லெண்டு ஆகியோர் முன்னிலையில் இன்று (10.06.2025) குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) மரு.கோமள வள்ளி, துணை முதல்வர் சுந்தர், இணை பேராசிரியர் சுபாஷ்,உறைவிட மருத்துவ அலுவலர் முத்துகுமார், மாவட்ட நூலக மைய அலுவலர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் நூலகர் முத்துகிருஷ்ணன், களக்காடு நகராட்சி துணைத் தலைவர் பி.சி.ராஜன், முக்கிய பிரமுகர் பரமசிவ ஐயப்பன் மற்றும் சித்த மருத்துவர்கள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

