» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விஸ்வகர்ம தர்ம பரிபாலன சங்கத்தின் மகாசபை கூட்டம்
புதன் 30, ஜூலை 2025 10:30:17 AM (IST)

தூத்துக்குடி விஸ்வகர்ம தர்ம பரிபாலன சங்கத்தின் மகாசபை கூட்டம் நடைபெற்றது.
தலைவர் சண்முகசங்கர் தலைமை தாங்கினார், செயலாளர் சசிகுமார் ஆண்டு அறிக்கை வாசித்து மகாசபை கூட்டத்தில் உறுப்பினர்களிடம் ஏக மனதாக ஒப்புதல் பெறப்பட்டது. அதனை தெடர்ந்து பால விநாயகர் கோவில்தெருவில் இருக்கும் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வணிக வளாகத்தில் மேல்மாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்டது.
இதனை தெடர்ந்து பொருளாளர் தளவாய்பாண்டியன் மற்றும், உதவி தலைவர் சுடலையாண்டி (எ) ரத்தினம் ஆகிய இருவரின் பொறுப்புக்கு பதிலாக செயற்குழு உறுப்பினர் கார்த்தீசன் சங்கத்தின் புதிய பொருளாளராகவும், வெங்கடேசன் உதவி தலைவராகவும் மகாசபை உறுப்பினர்கள் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் முறையாக பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். அதனை தெடர்ந்து ராஜகோபால் நன்றியுரை வாசித்தார்.
அதன் தெடர்ச்சியாக சங்க அலுவலகத்தில் வைத்து 2024-2025 ம் ஆண்டின் 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலைவாணி கல்வி பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தகுதி பெற்ற மாணவ மாணவியர்க்கு சங்கத்தின் பொறுப்பாளர்கள் பரிசுகள் வழங்கினர்.
அதனை தொடர்ந்து சர்வதேச ஸ்ட்ரென்த் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தூத்துக்குடி மாணவி மாணவி ரா.பீரீத்தி சிவ பிச்சம்மாள் என்பவருக்கு சங்கத்தின் தலைவர் சண்முக சங்கர் பரிசு வழங்கி கவுரவித்தார். செயலாளரும் சசிகுமார் பொருளாளர் கார்த்தீசன், உதவி செயலாளர் ராஜகோபால் உதவி தலைவர் வெங்கடேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசகர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)


மணியன்Aug 1, 2025 - 08:20:58 AM | Posted IP 162.1*****