» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது : சபாநாயகர் மு.அப்பாவு பெருமிதம்!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:27:54 PM (IST)



தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக திகழ்கிறது என பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தென் மண்டலத் திரளணியினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில்தான் சாரண, சாரணியர் இயக்கத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்து தேவையான நிதி வழங்கப்பட்டதால் இந்தியாவிலேயே தமிழகத்தில் சாரண, சாரணியர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் பயிற்சி மையமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையின்படி 2030 - ஆண்டுக்குள் பட்டம் பயின்றவர்கள் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என செயல்திட்டம் வகுத்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பட்டதாரிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில்தான் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை பட்டம் படிப்பவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக அளவில் குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில் 41 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக திகழ்கிறது என தெரிவித்தார்.

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர்கள் தெற்கு மண்டல திரளணி நிகழ்வு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் இன்று 21- ந்தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த நிகழ்வில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவ மாணவிகளும், இவர்களை வழிநடத்துவதற்காக 100 ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த முகாமில் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தலைவர் விஜிலா சத்தியானந்த் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் , களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன் , சாரணர் சாரணியர் இயக்க மாநில பொருளாளர் விஜயன் , செயலாளர் முத்தமிழ்பாண்டியன் , நெல்லை பொறியியல் கல்லூரி முதல்வர் மாணிக்கராஜ் , மாவட்ட கல்வி அலுவலர்கள் சங்கீதா சின்னராணி , முத்துராஜ் , திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஜோதிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory