» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:43:48 PM (IST)

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்.

திமுக செய்தித்தொடர்பாளாரக செயல்பட்டவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி , கட்சிக்கு அவப்பெரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாககூறி கடந்த 2022 அக்டோபர் மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அரசியலில் இருந்து சற்று விலகியிருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பின்னர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று பாஜகவில் இணைந்தார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory