» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் : நவ.9-ல் புறப்படுகிறது
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:07:20 AM (IST)
இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆா்சிடிசி) சாா்பில் வரும் நவ.16-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஐஆா்சிடிசி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆா்சிடிசி சாா்பில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி எனும் பெயரில் வருகிற நவ.9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், நாசிக், ஷீரடி, சிங்கனாப்பூா், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களைப் பாா்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலா நவ.16-ஆம் தேதி முடிவடையும்.
திருநெல்வேலியிலிருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் மற்றும் விஜயவாடா ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.
பயணக் கட்டணம், முன்பதிவு மற்றும் சுற்றுலா விவரங்களுக்கு ஐஆா்சிடிசி அலுவலகங்களை சென்னை- 90031 40739, 82879 31964, மதுரை- 82879 31962, 82879 32122, திருச்சி- 82879 32070, கோவை- 90031 40655 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
