» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி: முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:03:50 PM (IST)

மானூரில் ரூ.12.58 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.08.2025) சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.12.58 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, சிறப்பித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு ஏழை, எளிய சாமானிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டுமென்பதற்காக பல்வேறு நடவடிக்கையினை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரிக் கனவு உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் மூலம் இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிகளவிலான மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எளிதாக உயர்கல்வி பயில்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.12.58 கோடி மதிப்பில் 4399.71 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தலைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தினை இன்றையதினம் திறந்து வைத்துள்ளார்கள்.
தரைத்தளத்தில் வகுப்பறை -2, அலுவலக அறை, பதிவு வைப்பறை, முதல்வர் அறை, மாணவர் கூட்டுறவு பண்டகசாலை, உடல் நல மையம், துறைதலைவர் அறை 2, நூலகம், ஆசிரியர், ஆசிரியை அறை, முகப்பு, வரவேற்பறை, மாற்றுத்திறனாளி கழிப்பறை போன்ற வசதிகளும், முதல்தளத்தில் வகுப்பறை 6, ஆய்வகம் 3, துறைதலைவர் அறை 2 ஆசிரியர் மற்றும் ஆசிரியை அறைகளும், இரண்டாம் தளத்தில் வகுப்பறை 6, ஆய்வகம் 3, கருத்தரங்கு கூடம், துறைத்தலைவர் அறை ஆசிரியர் மற்றும் ஆசிரியை அறை மற்றும் அனைத்து தளத்திலும் மாணவ, மாணவியர்களுக்கு கழிப்பறை வசதிகளுடன் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மற்றம் சுற்றுவட்டாரங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில முடியும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் டாரதி, மானூர் ஊராட்சித் தலைவர் செல்வி.ஸ்ரீலேகா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சத்தியவாணி முத்து, மானூர் ஊராட்சித் துணைத்தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் பாசகுமாரி, மாரிபிரியா, உதவி செயற்பொறியாளர் நல்லசிங், உதவி பொறியாளர் சரத்குமார், ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
