» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகளின் முறையற்ற செயல் : முருக பக்தர்கள் குமுறல்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:48:43 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் விற்பனையை முறைப்படுத்தவும் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்களை நியமிக்கவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி கோவில் நிர்வாக அதிகாரிகள் முறையற்ற செயலில் ஈடுபட்டு, பக்தர்களை குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்திட உதவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறும்போது, "இது போன்ற நிகழ்வுகளால் திருக்கோவில் வரும் முருக பக்தர்கள் இந்துக்கள் மன குமுறல் அடைகின்றனர். இந்து மக்களின் முருக பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் செயல்படுகிறது. பொதுமக்களாகிய நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் உங்களை நம்பி தான் பயணிக்கிறோம்.
திருக்கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சண்முக விலாஸ் பாதையை திறந்து விட்டு பணம் கொடுப்போருக்கும் அதிகாரத்தில் இருப்பவருக்கும் கதவை திறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கடவுள் முன் அனைவரும் சமம் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வே்ணடும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)



குமார்.Sep 1, 2025 - 02:49:28 PM | Posted IP 104.2*****