» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)
இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனராக தமிழகத்தினை சேர்ந்த டாக்டர் அறவாழி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் இவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவர் 2004ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் போது பணிபுரிந்தவர். இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்த போது ஆதிச்சநல்லூரில் அப்போது தமிழரான டாக்டர் அருண்ராஜ் என்பவர் பணிபுரிந்தார். அதன் பின் வந்த இயக்குனர்களில் பலர் வடநாட்டை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் பரமரிப்பு இன்றியும், அமைய இருந்த சி சைட் மியூசியம் தடைபட்டும் கிடந்தது. அதோடு மட்டுமல்லாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் கடந்த 5.08.2023ல் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் தடைப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் டாக்டர் அறவாழி திருச்சி மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆர்வலரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

