» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:29:22 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பேர் உயிர் தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தூத்துக்குடியில் இருந்து 67 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்றது. நேற்று மதியம் 3.35 மணிக்கு சென்னையில் தரை இறங்கியபோது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்டு விமானி அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் பத்திரமாக தரை இறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் தரை இறங்கியதும் விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலை பழுது பார்க்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டு கண்ணாடியை மாற்றும் பணி நடந்து வருகிறது.
விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதேபோல் மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்திலும் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)



கம்ப்யூட்டர் பொறியாளர்Oct 14, 2025 - 01:18:19 PM | Posted IP 162.1*****