» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி முதல் நவ.1ஆம் தேதி வரை விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது..
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு தேசிய விட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நமது மாவட்டத்தில் 27.10.2025 முதல் 01.11.2025 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 6 வயது வரை சுமார் 1,07,537 இலட்சம் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.விட்டமின் ஏ சத்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும் விட்டமின் ஏ சத்து, கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். குடல், சிறுநீர்,சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க விட்டமின் ஏ நுண்சத்து உதவுகிறது.
விட்டமின் ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும் 12 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)


