» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் : உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:43:04 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில், "தென் மாவட்டங்களில் தூத்துக்குடி வர்த்தகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் இருந்தும் அதிக அளவில் வர்த்தக நோக்கத்துடன் பெருமளவு தொழில் முனைவோர்கள் சென்னை சென்று வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருவதால் சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.
லோக்மான்ய திலக் - மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னை வழியாக ஹைதராபாத்துக்கு இரவு நேர இரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா பயணிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.
தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மெமு ரயில்கள் இயக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தினமும் தூத்துக்குடிக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
அதானேNov 2, 2025 - 06:47:25 PM | Posted IP 104.2*****
கனிமுளி விமான நிலையத்தை தான் தேர்ந்தெடுத்தாரே ..
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)





S சந்திரசேகரன்Nov 3, 2025 - 06:47:28 AM | Posted IP 104.2*****