» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)
களக்காடு அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை அரிவாளால் வெட்டி, வீட்டை சூறையாடிய வாலிபர் உள்பட 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இந்த பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சமீபத்தில் தொழிலாளி தனது மகளுடன் காரங்காட்டில் உள்ள பூர்வீக கோவிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது மாணவிக்கும், அதேபகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. இதையறிந்த மாணவியின் தந்தை கண்டித்தார். மேலும் மகளின் செல்போனையும் பறித்துவிட்டார். இதனால் வேதனையடைந்த மாணவி இதுகுறித்து தனது காதலன் சுரேசுக்கு தகவல் அளித்தார்.
காதலியுடன் பேசமுடியாததால் ஆத்திரமடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் மாலையில், நாங்குநேரியை சேர்ந்த சுப்பையா என்ற சுபாஷ், அந்தோணி மிக்கேல்ராஜ், வள்ளியூரை சேர்ந்த உச்சிமாகாளி உள்பட 6 பேரை அழைத்துக்கொண்டு மாணவியின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டுக்குள் இருந்த மாணவியின் தந்தைக்கும், சுரேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் உள்பட 7 பேரும் சேர்ந்து மாணவியின் தந்தையை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் அலறினார். ஆனாலும் ஆத்திரம் தீராத கும்பல், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி, டி.வி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மேலும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவியின் தந்தை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் உள்பட 7 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




