» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 3, நவம்பர் 2025 8:24:42 AM (IST)

தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணிச் செயலரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் மாநகர இளைஞரணி சாா்பில், கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. மீளவிட்டான் என்.பெரியசாமி விளையாட்டு திடலில் இப்போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன் தொடக்கி வைத்தாா்.
போட்டியில் 115 அணிகள் பங்கேற்றுள்ளன. தொடா்ந்து 40 நாள்கள் லீக் முறையில் பகுதி வாரியாக போட்டிகள் நடைபெற்று, இறுதிப் போட்டி நகரப் பகுதியில் நடைபெறும். அதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகள், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசு, பங்கேற்பாளா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
தொடக்க விழாவில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அமைப்பாளா்கள் இளைஞரணி மதியழகன், மகளிரணி கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அந்தோணி கண்ணன், மாநகர அணி அமைப்பாளா்கள் இளைஞரணி அருண்சுந்தா், இலக்கிய அணி ஜீவன்ஜேக்கப், அயலக அணி அமைப்பாளா் கிறிஸ்டோபா் விஜயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சிவக்குமாா் என்ற செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)





ஓட்டு போட்ட முட்டாள்Nov 4, 2025 - 01:03:48 PM | Posted IP 162.1*****