» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை : மேயர் தகவல்!
புதன் 5, நவம்பர் 2025 12:25:02 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் பேசியதாவது "தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் உள்ள ஐந்து வார்டுகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள வாடுகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் சிறு சிறு பாதிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மோட்டார்கள் வைத்து தண்ணீர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ஆதிபராசக்தி நகரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரே வடிகால் வழியாக தான் தண்ணீர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தாமதமானது. மேலும் காலி மனைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை லாரியில் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கொசு உற்பத்தி தடுக்கப்படும். மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. வீடுகளில் பழைய டயர்கள் டப்பாக்கள் குளிர்சாதன பெட்டிகளில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள். இதனால் கொசு உற்பத்தி ஆகும். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள். கேரி பேக் பயன்பாடு சற்று குறைந்து உள்ளது. பொதுமக்கள் நினைத்தால் தான் இதை ஒழிக்க முடியும்.
தூத்துக்குடியில் 4000 புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளது. தற்போது புதிய வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படுவதால் சில ரோடுகள் உடைக்கப்பட்டு வருகின்றது. அதையும் உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். பின்னர் 52 பேர்களிடம் மனுக்களை பெற்றார். இதில் இறப்பு பிறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார் நகர் நல அலுவலர் சரோஜா மண்டல ஆணையர் முனீர் அகமது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, சண்முக கனி, ஜெயசீலி, ஜெயசுதா, காந்தி மணி, அந்தோணி மாஸ் கிளீன், பட்டுக்கனி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
MUTHUKRISHNANNov 5, 2025 - 01:39:35 PM | Posted IP 162.1*****
kosuvai olipatharku navadikai edungal
தமிழ்ச்செல்வன்Nov 5, 2025 - 01:26:57 PM | Posted IP 104.2*****
நாய்க்கு கருத்தடை பண்ணுன கணக்கு எழுதுன மாதிரி....
கொசு மருந்து அடிச்சதா எத்தனை கோடிக்கு கணக்கு எழுதப் போறாங்களோ...
அடக்கடபுடா....
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)





காய்ச்சல்காரன்Nov 5, 2025 - 06:54:46 PM | Posted IP 172.7*****