» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!

திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)

தூத்துக்குடியில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்று நூதன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பாஜக உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு தான் பல ரோடுகள் போடப்பட்டன. ஆனால் அனைத்தும் தரம் இல்லாமல் போடப்பட்டு பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை. 

மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரியாக அமைக்காததால் அதன் அருகில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்கள், இக்குழிகளினால் விபத்துக்குள்ளாகிறார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் தரமில்லாத ரோட்டில் தான் நான்கு சக்கர வாகனத்தில் செல்வதால் அவர்களுக்கு பொது மக்கள்படும் அவதி தெரிவதில்லை. 

ஆகையால், அனைத்து அரசு அதிகாரிகளும் இரு சக்கர வானத்தில் தான் அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்திர விடவேண்டியும், இது மாதிரி மோசமான சாலையை முறையாக பராமரித்து பொது மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

BabuNov 18, 2025 - 07:54:33 AM | Posted IP 162.1*****

thamiraparani palathula innum puncher ottitu irukanuga chai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory