» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:35:47 PM (IST)

2024 ஆண்டு புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும், பயிர்களை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களை வைத்து விரட்டி அடிக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓஎ நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்புராஜ் மாவட்ட தலைவர்கள் நடராஜன் வெள்ளத்துரை பாண்டி செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி தென்காசி மாவட்ட தலைவர் தாமோதரன் கோவில்பட்டி வட்டாரத் தலைவர் வெங்கடாசலபதி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட சுமார் 120 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், விவசாயிகளிடம் வனத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடும் நிவாரணம் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்பதை கூட்டம் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)


