» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொலை - கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:33:50 PM (IST)
தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.10.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (21) என்பவரையும், அதேபோன்று கடந்த 14.10.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (26) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (18.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)


