» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: தூத்துக்குடியில் சீமான் பேட்டி!

திங்கள் 11, நவம்பர் 2024 2:59:41 PM (IST)

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  வலியுறுத்தினார். 

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் "இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்று கூறும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா? இந்திய பெருங்கடலில் இந்திய மீனவர்க்ள மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா? இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வேண்டும். மேலும் கட்சத்தீவை மீட்க வேண்டும்

அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை முடித்து வைக்கும் தி.மு.க. அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறது. வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும். அதிகாரம் என்பது நிலையானது அல்ல. தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வரும்போது அனைத்தும் பொட்டலாகி விடும்.

தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்று என்பதே தவறு. அது எப்படி கொலைகாரனும், கொலையானவனும் ஒரே ஆளாக இருக்க முடியும். தமிழ்த் தேசியம் கடற்கரையை காக்கும், திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும். தமிழ்த் தேசியம் ஆட்சிக்கு வந்தால் கல்லறையை இடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory