» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் : ஆட்சியர் தகவல்

திங்கள் 11, நவம்பர் 2024 5:03:10 PM (IST)

இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்டும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. 

சாலை பாதுகாப்பு சட்டத்தின்படி, அனைத்து வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தல் அவசியமானதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் சேகரித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து ஒட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எனவே, கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 20.11.2024 க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆதார் அட்டை நகல், சமீபத்தில் எடுத்த பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் -2, RC புத்தகம், இன்சுரன்ஸ் நகலுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory