» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து : மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதன் 13, நவம்பர் 2024 1:24:50 PM (IST)



சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படாது. அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளியின் உறவினர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory