» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்திற்கு டிச.3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு!
திங்கள் 18, நவம்பர் 2024 5:44:54 PM (IST)
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
(2) 03.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.