» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு: பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் அனுமதி!

திங்கள் 18, நவம்பர் 2024 8:22:59 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் யானை தாக்கி 2பேர் இறந்த நிலையில் பரிகார பூஜைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மதியம் 3 மணி அளவில் தெய்வானை யானை மிதித்து 2 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, அனைத்து நடைகளும் அடைக்கப்பட்டன. 
 
பின்னர் மாலை 5 மணிக்கு மேல் 2 பேர் பலியான இடத்தில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு அந்தப் பகுதியில் சிறப்பு தீபாரணை நடந்தது. அதன் பின்பு மாலை 6 மணியளவில் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரணை நடந்தது. அதன் பின்பு கோவிலுக்குள் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, கோவில் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், காவல் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory