» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவை எதிர்த்தாலே சங்கியா?” சீமான் கேள்வி! ரஜினியை சந்தித்தது குறித்து விளக்கம்
வெள்ளி 22, நவம்பர் 2024 3:11:27 PM (IST)
திமுகவை விமர்சித்தாலே சங்கியா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு இன்று நேரில் சென்ற சீமான் அவரிடம் வாழ்த்துப் பெற்றார். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், திரைத்துறை குறித்தும் இருவரும் பேசியதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டி: ”விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க விரும்பாதவன் வெற்றியை கடந்து செல்ல முடியாது. சங்கி என்றால் சகதோழன் அல்லது நண்பன் என்று அர்த்தம்.
திடீரென்று பிரதமரை காலையில் மகனும்(உதயநிதி) மாலையில் தந்தையும் (ஸ்டாலின்) சந்திக்கிறார்கள். எதற்கு சந்திப்பு என்று சொல்லப்படுவதில்லை, எதைப்பற்றி பேசினார்கள் என்றும் கூறவதில்லை. முதல்வருக்கும் பிரதமருக்கும் கள்ளஉறவு இல்லை, நல்லஉறவுவே இருக்கிறது. எங்களை சங்கினு சொல்கிறார்கள். திமுகவை எதிர்த்தாலே சங்கியா?” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நான் வெளிப்படையாக கூறுகிறேன். நல்ல ஆட்சி கொடுத்தா வாக்குக்கு காசு கொடுக்க வேண்டிய நிலைமை தேவையில்லை. தொடர்ச்சியா அதைத்தான் செய்றாங்க. இதைத்தான் "சிஸ்டம் தவறு" என ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு, மாத்தணும்னு சொன்னேன். அதுகுறித்து தான் பேசினோம்." இவ்வாறு அவர் கூறினார்.
naan thaanNov 23, 2024 - 01:33:28 PM | Posted IP 162.1*****